ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

வட்டக்கானலுக்கு படையெடுக்கும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள்..! - கொடைக்கானலில் தீவிர சோதனை..

வட்டக்கானலுக்கு படையெடுக்கும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள்..! - கொடைக்கானலில் தீவிர சோதனை..

இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

vattakaanal tourism | மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல்  வட்டக்கானல் பகுதியில் டிரோன் கேமராக்களை பயன்படுத்தினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் துறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியுள்ளதால் பாதுகாப்பு  பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலங்கள் ஆகும்.இந்த மாதங்களில் மலைப்பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் மிதமான வெப்பத்தினை அனுபவிக்க இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகின்றனர். அவர்கள் வட்டக்கானல் பகுதிகளில் தங்கி ஓய்வு எடுத்து இதமான கால நிலையை ரசித்து, அங்குள்ள‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு  மகிழ்ந்து  செல்வது வழக்கமான ஒன்று.மேலும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமைகளில்  மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நிலையில்  ஐ.எஸ்.ஐ .எஸ் தீவிரவாத அமைப்பு  வட்டகானலில் கூடும் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை தாக்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு தெரியவந்தது, இதனையடுத்து  வட்டக்கானல் பகுதிக்கு வரும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக  வருடந்தோறும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

Read More : ''அண்ணாமலை ஒரு கோமாளி அரசியல்வாதி''.. திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம்!

இந்நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையானது வட்டக்கானல் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது.இதன் காரணமாக கொடைக்கானல் காவல் துறையினர்  வட்டக்கானல் பகுதியில் பாதுகாப்பு பணி, ம‌ற்றும் ரோந்து ப‌ணியிணையும் தீவிரப்படுத்தியுள்ளனர.மேலும்  வட்டக்கானல் நுழைவுவாயில் சோதனை சாவடி பகுதிக்கு வரும்  வாகனங்களை காவல் துறையினர் தீவிர சோதனை செய்த பிறகே வட்டக்கானல் பகுதிக்குள் அனுமதித்து வருகின்றனர்,

மேலும்  வட்டக்கானல் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டும் எனவும், விடுதிகளில் தங்கும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளின் முழு விவரங்களும் சேகரித்து கொடைக்கான‌ல் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல்  வட்டக்கானல் பகுதியில் டிரோன் கேமராக்களை பயன்படுத்தினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் அவ‌ர்க‌ள் எச்சரித்துள்ளார்

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Dindigul, Tourism