ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... செல்பி எடுத்து உற்சாகம்!

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... செல்பி எடுத்து உற்சாகம்!

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Kodaikanal tourist | சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களையொட்டி நேற்று முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ச‌னிக்கிழ‌மையான‌ இன்று தமிழக மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட ப‌ல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை பிற்ப‌க‌ல் முத‌லே அதிக‌ரித்து காண‌ப்பட்ட‌து.

மோய‌ர்ச‌துக்க‌ம், குணாகுகை, தூண்பாறை உள்ளிட்ட‌ 12 மைல் சுற்றுலாத‌ல‌ங்க‌ள் ம‌ற்றும் பேரிஜ‌ம் ஏரி, தொப்பித்தூக்கிப்பாறை உள்ளிட்ட‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளிலும் இந்த‌ப்ப‌குதிக்கு செல்லும் சாலைக‌ளில் ம‌ர‌ங்க‌ள் சாலையின் குறிக்கே முறிந்து விழுந்துள்ள‌தால் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் பார்வைக்கு வ‌ன‌த்துறையின‌ர் த‌டை விதித்துள்ள‌ன‌ர்.

இருப்பினும் கொடைக்கான‌லில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌லைப்ப‌குதிக‌ளில் நில‌வும் இத‌மான‌ குளுமையான காலநிலையை அனுபவித்தவாறு , பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள‌ பூக்க‌ளையும் இயற்கை அழகினையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து ஆடிப்பாடி உற்சாக‌ம‌டைந்து வருகின்றனர்.

மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும், வெள்ளிநீர்வீழ்ச்சி, வ‌ட்ட‌க்கான‌ல் அருவி உள்ளிட்ட‌ அருவிக‌ளில் சீராக‌ கொட்டும் நீரின் முன்பாக‌ நின்றும் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக், கொடைக்கானல்

First published:

Tags: Kodaikanal, Local News, Tourist spots