ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொடைக்கானல் காதல்.. டிவி பார்ப்பதில் சண்டை.. வாலிபரை கொன்றது எப்படி? பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த காதலி!

கொடைக்கானல் காதல்.. டிவி பார்ப்பதில் சண்டை.. வாலிபரை கொன்றது எப்படி? பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த காதலி!

சூர்யா - சுவேதா

சூர்யா - சுவேதா

டி.வி பார்ப்பதில் எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சூர்யா தன்னை தாக்க முற்பட்டார் எனவும், அதனால் தன் ஆண் நண்பர்களுக்கு தகவல் சொன்னதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் பெண் உட்பட 4 ஆண் நண்பர்களிடம் விசாரணை நடத்திய போது, கைதான பெண் சுவேதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில்  ''நான் ஒரு வருடத்திற்கு முன்பு கொடைக்கானல் வந்தேன். அப்போது எனக்கும் சூர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.  மேலும் நாட்கள் செல்ல, சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காமல் போனது. அதனால் அவரை பிரிந்து மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டேன். சென்னை வந்த பிறகு அவருடன் பேசாமல் இருக்க அவர் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  லிவிங் டூ கெதர் ஜோடி.. மரணத்தில் முடிந்த சந்திப்பு - நள்ளிரவில் விடுதியில் நடந்தது என்ன?

மேலும் குறிப்பிட்ட அவர், ''ஒரு மாதத்திற்கு முன்பு, மீண்டும் வேலை தேடி கொடைக்கானலுக்கு வந்த போது, பாம்பார்புரத்தில், வீடு எடுத்து தங்கிய போது மீண்டும் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி கல்லுகுழி பகுதியில் உள்ள சூர்யா வீட்டில் நானும் அவரும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது டி.வி பார்ப்பதில் எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சூர்யா தன்னை தாக்க முற்பட்டார். அதனால் தன் ஆண் நண்பர்களுக்கு தகவல் சொன்னேன். அங்கு வந்த ஆண் நண்பர்கள், எங்களுக்கிடையான சண்டையை விலக்கிவிட முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அருகே இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன் ஆண் நண்பர்கள் சூர்யாவை தாக்கி கால்களால் மிதித்தனர். அவர் மயங்கியதால், அவரை அங்கிருந்த கட்டிலில் படுக்கவைத்தோம்.

நீண்ட நேரமாகியும் அவர் கண் விழிக்காததால், அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதையடுத்து என்னையும், என் ஆண் நண்பர்களையும் போலீசார் கைது செய்துவிட்டனர்’’ என்றார்.


First published:

Tags: Kodaikanal, Murder, Murder case