Home /News /dindigul /

வத்தலக்குண்டு அருகே சந்தேகத்தால் மனைவி வெட்டி கொலை... போலீசில் சரணடைந்த கணவன்...

வத்தலக்குண்டு அருகே சந்தேகத்தால் மனைவி வெட்டி கொலை... போலீசில் சரணடைந்த கணவன்...

விருவீடு காவல் நிலையம்

விருவீடு காவல் நிலையம்

Dindigul | வத்தலக்குண்டு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 46.  இவர் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அஞ்சு லட்சுமி. வயது 36. இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள். அஞ்சு லட்சுமியும் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    மனைவி நடத்தை மீது செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டு, அது தொடர்பாக கணவன் மனைவி இடையே வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல இதே பிரச்சனையால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லபாண்டி மனைவி அஞ்சு லட்சமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அஞ்சு லட்சுமி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் செல்லப்பாண்டி விருவீடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    Also see...பார்சல் உணவில் எலி தலை.. ஆரணி ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடல்

    நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விருவீடு சார்பு ஆய்வாளர் கலையரசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அஞ்சுலட்சுமி பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செய்தியாளர்:சங்கர், திண்டுக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Dindigal, Husband Wife, Murder case

    அடுத்த செய்தி