முகப்பு /செய்தி /திண்டுக்கல் / இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கைது... ராகுல் காந்திக்கு எதிர்ப்பு காட்ட கன்னியாகுமரி செல்லயிருந்த நிலையில் போலீஸ் நடவடிக்கை

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கைது... ராகுல் காந்திக்கு எதிர்ப்பு காட்ட கன்னியாகுமரி செல்லயிருந்த நிலையில் போலீஸ் நடவடிக்கை

அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

ARJUN SAMBATH ARREST: . கோ பேக் ராகுல் என்ற முழக்கத்தோடு ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அர்ஜுன் சம்பத் அறிவித்திருந்தார்.

  • Last Updated :
  • Dindigul, India

கன்னியாகுமரியில் நடை பயணத்தை துவங்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ரயிலில் சென்ற இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனரான அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார். கோ பேக் ராகுல் என்ற முழக்கத்தோடு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் கன்னியாகுமரிக்கு அவர் ரயிலில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் வந்து கொண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

First published:

Tags: Arjun Sampath, Hindu Makkal Katchi, Rahul gandhi