Home /News /dindigul /

ரேஷன் கடைகளில் சோப்பு வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது - அமைச்சர் அதிரடி!

ரேஷன் கடைகளில் சோப்பு வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது - அமைச்சர் அதிரடி!

மாதிரி படம்

மாதிரி படம்

சோப்பு, சேமியா வாங்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Dindigul | Dindigul
    ரேசன் கடைகளில் சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அப்போது, பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க ஊழியர்கள் வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தது.

    குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளிலும் சோப்பு, சேமியா வாங்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Minister, Ration Shop

    அடுத்த செய்தி