Home /News /dindigul /

கொடைக்கான‌லில் 3 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ பெய்யும் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

கொடைக்கான‌லில் 3 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ பெய்யும் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

மழை

மழை

Kodaikanal | கொடைக்கான‌ல் ம‌ற்றும் அத‌ன் சுற்றுவ‌ட்டார‌ப்பகுதிக‌ளில் மூன்று ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ க‌ன‌ ம‌ழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. 

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என‌ சென்னை வானிலை மைய‌ம் அறிவித்திருந்த‌து. இந்நிலையில் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை முத‌ல் மித‌மான‌ வெப்ப‌ம் நில‌விய‌து. பிற்ப‌க‌ல் வேளையில் வானில் க‌ருமேக‌ங்க‌ள் சூழ்ந்து திடீரென ம‌ழை பெய்ய‌ தொடங்கியது.

    குறிப்பாக அப்ச‌ர்வேட்ட‌ரி, பேருந்து நிலையம், மூஞ்சிக்கல், அண்ணாசாலை, க‌ல்லுக்குழி, பிய‌ர்சோழா சாலை, பாம்பார்புர‌ம், வ‌ட்ட‌க்கான‌ல் உள்ளிட்ட‌ ந‌க‌ர் ப‌குதிக‌ளிலும் பூம்பாறை, மன்னவனூர் க‌வுஞ்சி, பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட ம‌லைக்கிராம பகுதிகளிலும் பரவலாக சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக க‌ன‌ ம‌ழை பெய்து வருகிறது.

    Also see... சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

    மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல்  மலைப்பகுதி முழுவதும் கடும் குளிரும் நிலவி வருகிறது.

    செய்தியாள‌ர்: கொடைக்கான‌ல், ஜாப‌ர்சாதிக்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Heavy Rainfall, Kodaikanal

    அடுத்த செய்தி