முகப்பு /செய்தி /Dindigul / திண்டுக்கல்லில் 3 மணிநேரத்தில் ₹ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை... ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்..

திண்டுக்கல்லில் 3 மணிநேரத்தில் ₹ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை... ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்..

3 மணிநேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை

3 மணிநேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை

Dindugal District : திண்டுக்கல் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மூன்று மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திண்டுக்கல் அருகே உள்ளது அய்யலூர். இந்த அய்யலூரை சுற்றிக் காகாய கவுண்டனூர், கடவூர் தென்னம்பட்டி, புத்தூர் மலைப்பட்டி, கொம்பேறிபட்டி ,வடமதுரை, உள்ளிட்ட பல மலை கிராம பகுதிகள் உள்ளன. இங்கு உள்ள விவசாயிகள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.  மலைக்கிராமங்களில் வளரக்கூடிய ஆடுகளுக்கு கறியின் சுவை அதிகமாக இருக்கும். 

அதுமட்டுமல்லாமல் ஆடுகளின் விலை குறைவாகவும் இருக்கும். இதனால் இங்கு வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தைக்கு மக்களின் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த சந்தைக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கம்.

வாரம் ஒரு முறை  வியாழக்கிழமையில் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள்  விற்பனையாகும். தற்போது பக்ரீத் பெருவிழா மற்றும் ஆடிப்பெருக்கு துவங்க உள்ள காரணத்தினால் இந்த வாரம் வியாழக்கிழமை 6 மணிக்கு துவங்கி 9 மணிக்கு நிறைவடைந்த  ஆட்டுச்சந்தையில் 3 மணி நேரத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.

பக்ரீத் பெரு விழா மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்ற வாரம் வரை 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ ஆட்டுக்கறி 300 ரூபாய் கூடுதலாகி 900 ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது. ஆட்டு இறைச்சியின் விலை கூடுதலாகவும் 3 மணி நேரத்தில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see... உயர் நீதிமன்ற தடையை மீறி உதகையில் பாறைகள் உடைப்பு... பகிரங்கமாக நடைபெறும் விதிமீறல்.. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அவலம்.

மேலும் கொரோனா  தொற்று பரவி வரும் நேரத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் இந்த விசேஷ காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் ஆடுகள் வாங்க குவிந்ததால் மேலும் தொற்று பரவக்கூடிய அபாய சூழ்நிலை உள்ளது.

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

First published:

Tags: Bakrid, Dindugal, New Market