முகப்பு /செய்தி /திண்டுக்கல் / மதுபோதையில் குப்புற விழுந்து கிடக்கும் ஆசாமிகளை குறி வைத்து பிக்பாக்கெட்... வெளியான வீடியோ

மதுபோதையில் குப்புற விழுந்து கிடக்கும் ஆசாமிகளை குறி வைத்து பிக்பாக்கெட்... வெளியான வீடியோ

குடிபோதையில் இருப்பவரிடம் திருடும் நபர்

குடிபோதையில் இருப்பவரிடம் திருடும் நபர்

மதுபோதையில் விழுந்து கிடைக்கும் நபர்களை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை, செல்போன்  மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருக்கும் நபர்களை குறிவைத்து பிக் பாக்கெட் அடிக்கும் கும்பல் குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

திண்டுக்கல் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இந்த காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி , சென்னை, கோவை ,மதுரை ,தேனி, கம்பம், குமுளி உள்ளிட்ட தென்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக பேருந்துகள் இயங்கி வருகின்றது.

இந்த பேருந்து நிலையத்திற்கு இரவில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே அயர்ந்து உறங்க கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. மேலும்  மது குடித்து விட்டு பேருந்து நிலையத்தில் போதையில் கிடப்பவர்களும்,  மது குடித்து விட்டு பேருந்திற்காக காத்திருப்பவர்களும் உள்ளனர். இதனிடையே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அயர்ந்து மதுபோதையில் உறங்கும் பொழுது மது போதையில் தூங்குபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.

இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து சிஐடியு வெளியேறியது...

மது போதையில் கீழே கிடக்கும் ஆசாமிகளை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை, செல்போன்  மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் மது அருந்துபவர்கள் மட்டுமன்றி பேருந்து இன்றி காத்திருக்கும் பயணிகளின் உடமைகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் பறிகொடுக்கும் அவல நிலையில் காமராஜர் பேருந்து நிலையம் சிக்கி தவித்து வருகிறது.

மதுபோதையில் இருப்பவரிடம் திருடும் நபர்

இந்நிலையில் நேற்றைய தினம் ( 23.08.2022 ) இரவு  திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மது போதையில் படுத்துக்கொண்டு உள்ளார். அவரிடம் பணத்தை ஒருவர் கொள்ளையடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க  மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? திருட்டு பயம் இன்றி பயணம் செய்ய முடியுமா?  என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: Dindugal, Viral Video