முகப்பு /செய்தி /திண்டுக்கல் / இது கொடைக்கானலா..? காஷ்மீரா..? - மீண்டும் கடும் உறைபனி பொழிவால் பொதுமக்கள் அவதி!

இது கொடைக்கானலா..? காஷ்மீரா..? - மீண்டும் கடும் உறைபனி பொழிவால் பொதுமக்கள் அவதி!

கொடைக்கானலில் உறைப்பனி

கொடைக்கானலில் உறைப்பனி

Kodaikanal Fog | இரவில் வெப்ப‌நிலை 10 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் க‌டும் குளிர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி பெய்து வருவதால் புற்கள், வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது.

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சி என்று அழைக்கப்படும் கொடைக்கான‌லில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உறைபனி சற்று தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான ஜிம்கானா, பாம்பார்புர‌ம், அப்ச‌ர்வேட்ட‌ரி, மூஞ்சிக்க‌ல், அர‌சு விளையாட்டு மைதானம் உள்ளிட்ட ப‌ல்வேறு இடங்களில் கடுங்குளிர் நிலவியது.

கொடைக்கானல் ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் சூரிய‌ ஒளி ப‌ட்ட‌தும், ப‌ட‌ர்ந்திருந்த‌ பனி ஆவியாகி சென்ற‌ காட்சியை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். அங்குள்ள புற்கள், உறைபனி படர்ந்து வெண்பட்டு விரித்தார் போன்று காட்சியளித்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக‌ன‌ங்க‌ளின் மேற்ப‌ர‌ப்பிலும் உறை ப‌னி படர்ந்து காணப்பட்டது.

நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்ப‌நிலை 10 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் க‌டும் குளிர் நிலவியது. இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வெப்பநிலை சென்றதால் கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டியது.

செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்

First published:

Tags: Dindugal, Kodaikanal, Local News