ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா.. பக்தர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.. அமைச்சர் அறிவிப்பு!

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா.. பக்தர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.. அமைச்சர் அறிவிப்பு!

பழனி முருகன் கோயில்

பழனி முருகன் கோயில்

பக்தர்களின் வசதிக்காக கோயிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani, India

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளன்று நகரப்பேருந்துகளில் பக்தர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் வரும் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குடமுழக்கு நிகழ்வைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

First published:

Tags: Bus, Govt Bus, Palani Murugan Temple