Home /News /dindigul /

கொடைக்கானலில் காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்... குட்டியை பாதுகாக்க தலைதெறித்து ஒடிய தாய் யானை

கொடைக்கானலில் காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்... குட்டியை பாதுகாக்க தலைதெறித்து ஒடிய தாய் யானை

கொடைக்கானலில் காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்

கொடைக்கானலில் காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்

Kodaikanal | கொடைக்கானல் கீழ்மலை கிராம பகுதிகளில் அதிக ஒலி எழுப்பி வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினர்.அப்போது குட்டியை பாதுகாக்க தாய் யானை தலைதெறித்து ஒடியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற செயல்களில் வனத்துறை ஈடுபட வேண்டாம் என மலைக்கிராம விவசாயிகள் கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஆடலூர், பன்றி மலை, கே.சி பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மலைக்கிராம விவசாயிகளையும்  தாக்கி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் கீழ்மலை கிரமமான பள்ளத்து கால்வாய் மலைச்சாலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலைக்கு தனது குட்டியுடன் இடம்பெயர்ந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியும், கூச்சலிட்டும் யானையை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்து வனத்துறையினர் விரட்டி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து காட்டு யானை தனது குட்டி யானையை பாதுகாக்க தலைதெறித்து சாலையில் ஓடி வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்று காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டுவதால் விவசாய நிலங்களில் முகாமிடும் காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மலைக்கிராம விவசாயிகளை தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மலைக்கிராம விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    Also see... ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..

    மேலும் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை காட்டு யானைகள் உண‌வாக‌ உட்கொண்டு செல்வதால் தாங்களுக்கு சிறிது அளவில் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. இது போன்று வனத்துறையினர் அச்சுறுத்தும் வகையில் காட்டு யானைகளை விரட்ட வேண்டாம் என மலைக்கிராம விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாள‌ர்: கொடைக்கான‌ல், ஜாப‌ர்சாதிக்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Elephant, Kodaikanal, Viral Videos

    அடுத்த செய்தி