மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராம பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பிரகாசபுரம், குண்டு பட்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் மலை கிராம விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர் ரக பூக்கள் வகைகளான ஜிப் சோப்ரா, சார்ட்டிஸ் உள்ளிட்ட கார்னேசன் பூக்களை பயிரிட்டு பராமரிப்பு செய்து வருகின்றனர்.
மேலும் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர் , இந்த உயர்ரக பூ வகைகள் மலர் பூங்கொத்துகள் கொடுப்பதற்கும், காதலர் தினத்தன்று ரோஜா மற்றும் இந்த கொய்மலர்களையும் இணைத்து தங்களது அன்பிற்கினியவர்களுக்கும் காதலர்கள் தங்களது காதலிக்கும் பரிசாக கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்த உயர் ரக பூக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பூ மட்டும் 6 முதல் 8 ரூபாய் வரை விற்பனையானதுடன் பல பகுதிகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வந்த நிலையில் வரும் 14ம் தேதி காதலர் தினம் என்பதால் ஒரு கொய் மலர் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் விற்பனையாவதால் மலைகிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுபெரு மாநகரங்களுக்கு ஆர்வத்துடன் ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கொய் மலர்களை சரிவர சாகுபடி செய்யமுடியாமல் வாழ்வாதாரம் பாதித்த விவசாயிகள் தற்போது கொய் மலர்களை ஆர்வத்துடன் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்வதால் மலைகிராமவிவசாயிகள் லாபம் அடைவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : ஜாபர்சாதிக் - கொடைக்கானல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Kodaikanal, Local News, Lovers day