முகப்பு /செய்தி /திண்டுக்கல் / 'இனி ஏரி மீது நடந்து செல்லலாம்...' - கொடைக்கானல் ஏரியில் அறிமுகமாகும் 'மிதக்கும் நடைமேடை!'

'இனி ஏரி மீது நடந்து செல்லலாம்...' - கொடைக்கானல் ஏரியில் அறிமுகமாகும் 'மிதக்கும் நடைமேடை!'

கொடைக்கானல் ஏரியில் மிதக்கும் நவீன நடைமேடை

கொடைக்கானல் ஏரியில் மிதக்கும் நவீன நடைமேடை

Floating Platform on Kodaikanal Lake : கொடைக்கான‌ல் ந‌ட்ச‌த்திர‌ ஏரி ப‌ட‌கு குழாமில் த‌ண்ணீரில் மித‌க்கும் ந‌வீன‌ ந‌டைமேடை விரைவில் திறக்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ந‌க‌ரின்  ம‌த்திய‌ப்ப‌குதியில் ந‌ட்ச‌த்திர‌ ஏரி அமைந்துள்ள‌து. இங்கு வ‌ர‌க்கூடிய‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ந‌ட்ச‌த்திர‌ ஏரியின் அழ‌கினை காணாம‌லும், ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் ப‌ட‌கு ச‌வாரி செய்யாம‌லும் ஏரியை சுற்றி சைக்கிள், குதிரை ச‌வாரி செய்யாம‌லும், ந‌டைப்ப‌யிற்சி மேற்கொள்ளாம‌ல் சென்ற‌தில்லை.

இந்நிலையில், கொடைக்கான‌ல் ந‌க‌ராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை சுற்றி ரூ.24 கோடி ம‌திப்பீட்டில் ப‌ல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் வெகுவாக கவரும் விதமாக சுமார் ரூ.35 லட்சம் செலவில் நட்சத்திர ஏரியில் தண்ணீரில் மிதக்கும் நவீன நடைபாதை காற்ற‌டைக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ளால் ஆன‌ (ஹெச்டிபீஇ)  அமைக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் ஏரியில் மிதக்கும் நவீன நடைமேடை

மேலும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் மிதக்கும் இந்த நவீன நடைபாதையில் எளிதாக‌ நடந்து சென்று பாதுகாப்பாக‌, பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ளுட‌ன் படகு சவாரி மேற்கொள்ளவும், 70க்கும்  மேற்பட்ட புதிய படகுகளும் வாங்கப்பட உள்ளதாகவும், இந்த மாத‌ இறுதிக்குள் ந‌டைமேடை ப‌ணிக‌ள் நிறைவடைந்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ப‌ய‌ன்பாட்டிற்கு வ‌ரும் என‌  நகராட்சி பொறியியல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏரிக்குள் மித‌க்கும் இந்த‌ ந‌வீன‌ ந‌டைமேடை ப‌ணிக‌ளை பொதும‌க்க‌ளும்  சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌ன் க‌ண்டு ர‌சித்து செல்கின்ற‌ன‌ர். த‌ண்ணீரில் மித‌க்கும் ந‌டைமேடை த‌மிழ்நாட்டில் உள்ள ஏரிக‌ளில் முத‌ன் முத‌லாக‌ கொடைக்கான‌லில் உள்ள‌ ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

செய்தியாள‌ர் : ஜாபர்சாதிக் - கொடைக்கான‌ல்

First published:

Tags: Dindigul, Kodaikanal, Local News