திண்டுக்கல் மாவட்டத்தில் பீரில் சுவை இல்லை என்று கூறி டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், பூத்தம்பட்டி அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் விற்பனையாளராக மல்வார்பட்டியை சேர்ந்த 45 வயதான பாலமுருகன் பணியாற்றி வருகிறார். புத்தாண்டு முதல்நாள் மதுபானக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
அன்று மாலை 4 மணி அளவில் கடைக்கு மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். மூன்று பீர் பாட்டில்களை வாங்கு சென்ற நண்பர்கள் மூவரும் அருகில் நின்றே அதை குடித்துள்ளனர். ஏற்கனவே மது போதையின் உச்சத்தில் இருந்த மூவருக்கும் பீர் ஒன்றும் போதை இல்லாதது போல் இருந்துள்ளது. இதையடுத்து போதையில் ஆத்திரமடைந்த மூவரும் மீண்டும் மதுபான கடைக்கு வந்துள்ளனர்.
பீரில் உப்பு சப்பும் இல்லை... டேஸ்ட் பத்தல என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்கள் அதிக விலை உயர்ந்த பீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். காசு கொடுத்தால் எந்த பீரையும் தருகின்றேன் என்று கடை ஊழியர் பாலமுருகன் கறாராக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் கையில் வைத்திருந்த பீர் பாட்டை மேசையில் உடைத்து கடை ஊழியர் பாலமுருகனை தாக்க முயன்றுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய பாலமுருகன் தனது மேல் அதிகாரிகளுக்கும் வேடச்சந்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் கடை வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணையை தொடங்கினர்.
தொடர் விசாரணையில் தகராறில் ஈடுப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பதும் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. பாலமுருகன் கொடுத்த புகாரை பெற்றுள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Crime News, Tasmac