Home /News /dindigul /

திண்டுக்கல்லில் நண்பர்களுடன் சேர்ந்து 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... 3 பேர் போக்ஸோவில் கைது...

திண்டுக்கல்லில் நண்பர்களுடன் சேர்ந்து 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... 3 பேர் போக்ஸோவில் கைது...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Dindigul | திண்டுக்கல்லில் 12 வயதுடைய பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உட்பட மூன்று பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India
    திண்டுக்கல்லை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி ( வயது 47). இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.  லிங்கமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது, இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். இதனால் இவரது மனைவி லிங்கமூர்த்தியை பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக லிங்கமுர்த்தி தனியாக வசித்து வருகிறார்.

    இவர் அடிக்கடி சமையல் வேலைக்கு செல்வதால் தனது 12 வயது மகளை தனது நண்பரான கண்ணன் (வயது55) வீட்டில் தங்க வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில், மதுபோதையில் லிங்கமூர்த்தி தனது நண்பர் கண்ணன் உடன் சேர்ந்து தனது  மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பாரதிபுரத்தில் அரிசி கடை நடத்தி வரும் முகமதுரபிக் ( வயது60)  என்பவரும் அந்த சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார்.

    இதனால், சிறுமியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை  பரிசோதனை செய்த பெண் மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தியதில் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார்.

    Also see...‘விமான நிலையம் வேண்டாம்.. விவசாயம் காப்போம்..’ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 50வது நாளாக பதாகைகளுடன் மக்கள் போராட்டம்

    இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை லிங்கமூர்த்தி அவரது நண்பர்கள் கண்ணன் மற்றும் முகமது ரபிக் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Dindigul, Father, Gang rape, My Daughter, POCSO case, Sexual abuse

    அடுத்த செய்தி