Home /News /dindigul /

பழனியில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நுரையுடன் வெளியேறும் நீர்.. விவசாயிகள் கவலை

பழனியில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நுரையுடன் வெளியேறும் நீர்.. விவசாயிகள் கவலை

மாசடைந்த தண்ணீர்

மாசடைந்த தண்ணீர்

Palani | பழனியருகே சிறுநாயக்கன் குளத்தில் கழிவு நீர் கலப்பதால்  தண்ணீர் மாசடைந்தது. இதனால் குளத்து நீர் நுரையுடன் வெளியேறுவதை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani Chettipatti, India
    பழனியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழனியில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது.  பழனி வையாபுரி கண்மாய், சிறுநாயக்கன் குளம் ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பழனி-தாராபுரம் சாலையில் உள்ள சிறுநாயக்கன் குளத்தில் தண்ணீருடன் சேர்த்து நுரையும் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாயக்கன் குளத்தில் இருந்து பாப்பா குளத்திற்கு மறுகால் பாயும்‌ இடத்தில் நுரைகள் தேங்கி வாய்க்கால் முழுவதும் பல அடி உயரத்திற்கு நிற்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    காரணம், விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது. பழனி நகரில் உள்ள சாக்கடை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் சிறு நாயகன் குளத்தில் கொண்டு சென்றுவிடுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுக்கும்போது வெள்ளை நிறத்தில் நுரையும் பெருக்கெடுக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    Also see... உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

    மேலும் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் கோதைமங்கலம் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பொதுப்பணி துறையினர் உடனடியாக கால்வாயை தூர்வார வேண்டும் என கிராம மக்களும் விவசாயிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: அங்குபாபு நடராஜன்,பழனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Farmers, Palani, Water

    அடுத்த செய்தி