ஹோம் /நியூஸ் /Dindigul /

விலை போகாத பன்னீர் திராட்சை.. கண்ணீரில் விவசாயிகள்

விலை போகாத பன்னீர் திராட்சை.. கண்ணீரில் விவசாயிகள்

பன்னீர் திராட்சை

பன்னீர் திராட்சை

இந்த வருடம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால்  திராட்சைப் பழங்களை வாங்க வியாபாரிகள் சரியாக வருவதில்லை என விவசாயிகள் கவலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னீர் திராட்சைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள  பெருமாள்கோவில் பட்டி, வெள்ளோடு, சாமியார்பட்டி, ஜாதி கவுண்டன்பட்டி, ஊத்துப்பட்டி, காமலாபுரம், கலிக்கம்பட்டி, கொடைரோடு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னீர் திராட்சை பயிர் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையக்கூடிய பன்னீர் திராட்சை இயற்கையாகவே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முப்பரிமான கொண்டதாகும்.  இந்த திராட்சை மருத்துவ குணம் கொண்ட திராட்சை யாகும்.  தற்பொழுது பன்னீர் திராட்சை சீசன் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் விளைவிக்கின்ற திராட்சைகள் கேரளா சென்னை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். விவசாயிகளின் தோட்டத்திற்கு வியாபாரிகள் நேரடியாக சென்று  பந்தலிலே திராட்சைகளை விலைக்கு வாங்கி செல்வார்கள். கடந்த காலங்களில் சீசன் நேரத்தில் ஒரு கிலோ திராட்சை ரூ 40 முதல் 50 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி சென்றனர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பன்னீர் திராட்சையை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

தற்போது அந்த சூழ்நிலை மாறி இந்த வருடம் பன்னீர் திராட்சை நல்ல விளைச்சல் கண்டுள்ளது ஆனால் விவசாயிகளை சோதிக்கின்ற வகையில் கோடைக்காலத்தில் எப்பொழுதுமே வெயிலின் தாக்கம் தான் அதிகமாக இருக்கும். அதேபோல்  பன்னீர் திராட்சையின் விற்பனையும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால்  திராட்சைப் பழங்களை வாங்க வியாபாரிகள் சரியாக வருவதில்லை.

Also Read: கேப்சூல் முறையில் நெல் சாகுபடி.. நவீன விவசாயத்துக்கு வித்திடும் விவசாயி

இதன் காரணமாக கொடியிலேயே திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்ட கூடிய சூழ்நிலை உள்ளது. திராட்சை பழங்களை வாங்க வரக்கூடிய வியாபாரிகள் கிலோ 15க்கு மட்டுமே கேட்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பன்னீர் திராட்சை பந்தலில் கவாத்து செய்து, மருந்து தெளித்து, கலை எடுத்து, தண்ணீர் பாய்சுதல் என  ஒரு ஏக்கருக்கு ரூ 80,000 முதல் 1,20,000 வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு கிலோ திராட்சை ரூ 50 க்கு விற்பனை ஆனால் தான் வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகும் ஆனால் தற்பொழுது கிலோ 15க்கு  கேட்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தனர் ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விவசாயிகளுக்கு என  வேளாண்துறை பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்துள்ளார் விவசாயிகளின் கஷ்டங்களை போக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். திண்டுக்கல் பகுதியில் பல வருடங்களாக திராட்சை ஜூஸ் ஃபேக்டரி வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே தமிழக முதல்வர் ஜூஸ் ஃபேக்ட்ரி  வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Dindigul, Farmers, Fruits, Tamil Nadu, Tamil News