ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கடன் வாங்கிய வங்கியிலே கொள்ளையடிக்க திட்டம்.. துணிவு வரை எல்லா படமும் பார்த்துட்டுதான் வந்தேன் - போலீசில் இளைஞர் பகீர் தகவல்

கடன் வாங்கிய வங்கியிலே கொள்ளையடிக்க திட்டம்.. துணிவு வரை எல்லா படமும் பார்த்துட்டுதான் வந்தேன் - போலீசில் இளைஞர் பகீர் தகவல்

வங்கி கொள்ளை

வங்கி கொள்ளை

Crime News : திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் வாங்கிய கடனை  கட்ட அதே கிளை வங்கியில்  புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்  கைது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.  இந்த வங்கியில் இன்று காலை நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உள்ளே வந்த திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த அபுதாகீர் மகன்  கலீல் ரகுமான் (வயது 22)  கையில் மிளகாய் பொடி,  ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் உள்ளே சென்றுள்ளார்.

வங்கியில் பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார்.  பின்னர்  தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முயன்றார். அப்போது வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து கொள்ளை கொள்ளை எனக்  கூச்சலிட்டு அழைத்ததார்.  பின்னர் பொதுமக்கள் வங்கியில் உள்ளே சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் கலீல் ரகுமானை பிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த  காவல்துறையினர்  கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை  பிடித்து  திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க:  கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய இளைஞர்

போலீசார் விசாரணையில் இவர் முகமதியாபுரம் பகுதியில் துணிக்கடை வைத்திருப்தாக கூறி  பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 4 மாதத்துக்கு முன்பு தொழில் கடனாக 3 லட்சம் வாங்கி உள்ளார். கடனை கட்ட முடியாமல்  வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் வாங்கிய கடனை கட்ட அதே கிளை வங்கியில் கொளையடித்து கடனை கட்ட வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளார்.

கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஒரு வாரமாக தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியை நோட்டமிட்டு வந்துள்ளார். தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக காவலர்களிடம் கூறியுள்ளர்.. பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)

First published:

Tags: Bank, Crime News, Dindugal, Local News, Thunivu