ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

திண்டுக்கல் பெட்ரோல் பங்கில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் பெட்ரோல் பங்கில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீப்பற்றி எறிந்த ஆம்னி வேன்

தீப்பற்றி எறிந்த ஆம்னி வேன்

Dindugal Fire Accident | பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ஆம்னி வேனை பெட்ரோல் பங்கில் இருந்து அப்புறப்படுத்தி சாலைக்கு கொண்டு வந்து பெரும் விபத்தை தடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

 பெட்ரோல் பங்கில்  ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக அதே ஊரைச் சார்ந்த ஓட்டுனர் மாணிக்கம்,  நாகேந்திரன் ,விக்னேஷ் ஆகியோர் ஆம்னி வேனை இன்று  திண்டுக்கல்லுக்கு எடுத்து வந்துள்ளனர். பின்னர் கரூர் பழைய சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆம்னி வேனுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.

இதனையடுத்து வேனில் ஸ்டார்ட் செய்த போது  எதிர்பாராத விதமாக திடீரென ஆம்னி வேனில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ஆம்னி வேனை பெட்ரோல் பங்கில் இருந்து அப்புறப்படுத்தி சாலைக்கு கொண்டு வந்தனர். அதற்குள் வேன் முழுவதும் தீ மளமள என பரவியது. வேனில் இருந்த மூன்று பேரும் உடனடியாக  வெளியேறினர்.

இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் அடித்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Dindugal, Local News, Tamil News