ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு பட்டதாரி இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு பட்டதாரி இளைஞர் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட அருண்குமார்

தற்கொலை செய்துகொண்ட அருண்குமார்

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கூத்தம்பூண்டி கிராமம், கருமாங்கிணறைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளைஞரான அருண்குமார், தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். அருண்குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் 50 ஆயிரம் பணத்தை இழந்ததால் தாயும், பாட்டியும் கண்டித்தனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இதுகுறித்து அருண்குமாரின் தாய் அளித்த புகாரின்பேரில், கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கருமாங்கிணறு பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் அருண்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Online rummy