ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

தாடிக்கொம்பில் களைகட்டிய ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த காளைகளை சினங்கொண்டு அடக்கிய வீரர்கள்!

தாடிக்கொம்பில் களைகட்டிய ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த காளைகளை சினங்கொண்டு அடக்கிய வீரர்கள்!

உலகப்பட்டி ஜல்லிக்கட்டு

உலகப்பட்டி ஜல்லிக்கட்டு

dindigul jallikattu | தாடிக்கொம்பு அடுத்த உலகப்பட்டியில், புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thadikombu | Dindigul

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

தாடிக்கொம்பு அடுத்த உலகப்பட்டியில், புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. திருச்சி, மதுரை, கரூர், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பரிசோதனைகளுக்கு பிறகே காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டித்தொடங்கும் முன்பு வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

போட்டியில் வெற்றிபெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தங்கக்காசுகள், பீரோ கட்டில்கள், வாகனங்கள் என ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் காளைகளை அடக்க வீரர்களும், காளையர்களை நோக்கி காளைகளும் சீறி பாய்ந்து வருகின்றன.

First published:

Tags: Dindigul, Jallikattu, Local News, Tamil News