திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நள்ளிரவில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோட்டில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் 40 வயதான சீனிவாசன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு கலையரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, வேலை விஷயமாக வெளியில் சென்ற சீனிவாசன் வீட்டுக்கு வர தாமதமானது.
இந்நிலையில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் இவர்களது வீட்டின் பின்பக்க கதவு வழியாக ஏறிக் குதித்து உள்ளே நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த கும்பல், சிறுவர்கள் இருவரையும் பிடித்து அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடக்கூடாது என மிரட்டியுள்ளது. மற்றொருவர், கதவின் அருகே உள்ளே யாரும் வராதவாறு பாதுகாப்புக்கு நின்று கொண்டார்.
பின்பு கலையரசியையும், குழந்தைகளையும் சமையலறையில் கத்தியுடன் நிறுத்தி விட்டு மற்ற மூவரும் வீட்டை சூறையாட ஆரம்பித்தனர். இரண்டு அறைகளில் இருந்த 5 பீரோக்களை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 48 சவரன் நகைகள் மற்றும் 18 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துக் கொண்டனர்.
பின் அங்கிருந்த 2 செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த சீனிவாசனிடம் கலையரசியும் சிறுவர்களும் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். உடனடியாக சீனிவாசன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் போலீசார் விசாணை நடத்தியதில், கத்தியை வைத்து மிரட்டியதால் பயந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினைக் கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் கூறியுள்ளார். கொள்ளையர்கள் என்ன சொன்னார்கள்? எங்கெங்கு நின்றார்கள் என்பதை சிறுவன் போலீசாரிடம் விளக்கினார்
கொள்ளைக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தனியாக இருந்த குடும்பத்தினரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dindigul, Robbery, Theft