முகப்பு /செய்தி /திண்டுக்கல் / திடீரென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை... எவ்வளவு தெரியுமா?

திடீரென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை... எவ்வளவு தெரியுமா?

வெங்காயம்

வெங்காயம்

Dindigul onion price | திண்டுக்கல்லில் கடந்த வாரத்தை விட வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல்லில் சின்ன வெங்காயத்திற்கு என தனி சந்தை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள தேனி, கம்பம், நிலக்கோட்டை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட  பல பகுதிகளில் இருந்து வெங்காய சந்தைக்கு  விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரக்கூடிய சின்ன வெங்காயத்தை ஏல முறையில் எடுக்கும் வியாபாரிகள் திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை, மதுரை மற்றும்  கேரளா போன்ற பிற  மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்வர்.

கடந்த 1ம் தேதி வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம்  30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.  தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்து வியாபாரிகள் வெங்காயம் கொள்முதல் செய்ய வருகை தந்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த விலை உயர்வானது குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.அதேபோல் மூன்று மாத காலமாக 9 ரூபாய் முதல்  17 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் பெரிய வெங்காயத்தின் விலை அதே விலையில் நீடித்து வருகிறது.

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்.

First published:

Tags: Agriculture, Dindigul, Onion Price, Vegetable price