முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பழனி தைப்பூச திருவிழா... திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முண்டியடித்த பக்தர்கள்... ரயிலில் புட்போர்டு!

பழனி தைப்பூச திருவிழா... திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முண்டியடித்த பக்தர்கள்... ரயிலில் புட்போர்டு!

ரயிலில் முண்டியடித்து ஏறிய பக்தர்கள்

ரயிலில் முண்டியடித்து ஏறிய பக்தர்கள்

Thaipoosam train | தைப்பூசத்தினத்தை முன்னிட்டு முருகனை காண பக்தர்கள் குவிந்ததால் திண்டுக்கல் ரயில் நிலையமே ஸ்தம்பித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani | Dindigul

திண்டுக்கல்லில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பக்தர்கள் முண்டியடித்து கொண்டு ரயிலில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி மலை அமைந்துள்ளது. இந்த பழனி மலையில் தை மாதம் பௌர்ணமி தினத்தன்று தைப்பூசமானது வெகு விமர்சையாக நடைபெறும். இந்த தைப்பூசத் திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் சென்னை, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி உள்ளிட்ட வட தமிழகத்திற்கும் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், உள்ளிட்ட பல தென் தமிழகத்திற்கும் மைய்ய பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையம் ஆனது அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்கள் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து ரயில் மூலமாக பயணம் செய்வது வழக்கம் இந்த ஆண்டு பழனியில் தைப்பூசத் திருவிழாவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கூவிந்தனர். சனி, ஞாயிறு விடுதி முறைகளை முடித்துவிட்டு பணிகளுக்கு செல்லக்கூடிய பயணிகளும் குவிந்ததால் திண்டுக்கல் ரயில் நிலையம் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் மட்டும் பொது மக்களின் கூட்டங்கள் குவிந்து காணப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் இடம் பிடிப்பதற்காக ரயில் பெட்டியில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுடன் ஏறி இடம் பிடித்தனர்.

இடம் கிடைக்காத பக்தர்களும் பொதுமக்களும் ரயில் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கியவரே பயணம் செய்தனர். வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திக்குமுக்காடினர்.

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

First published:

Tags: Dindigul, Local News, Murugan temple, Palani Murugan Temple