ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

செவ்வந்திப் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி...

செவ்வந்திப் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி...

பூக்களின் விலை சரிவு

பூக்களின் விலை சரிவு

கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் நடை திறப்பு விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் செவ்வந்திப் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, பஞ்சாமிர்தம், சிறு மலை, மலை வாழை, சுங்குடி சேலை, ஜிலேபி, பிரியாணி என பல்வேறு பொருட்களுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். அதுபோலவே  பூக்களுக்கும் பெயர் பெற்ற மாவட்டம் திண்டுக்கல். குறிப்பாக திண்டுக்கல்லில் விளையும் பூக்கள் மண்ணின் தரம் காரணமாக உடனடியாக வாடிப் போவதில்லை.

  தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து இருந்தாலும் விவசாயிகளின் மகிழ்ச்சியை கூட்டும் விதமாக கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அதனை ஒட்டி கார்த்திகை மாதம் முழுவதும் பூக்களுக்கு நல்ல கிராக்கிகள் இருக்கும்.

  அந்த அடிப்படையில் செவ்வந்தி பூவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு கிலோ செவ்வந்திப் பூ 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்கப்படுகிறது. இதனால் கடந்த வாரம் வரை ரூபாய் 40க்கு விலை போன செவ்வந்தி பூ தற்போது 70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை நேர்முகமாக இருக்கும்.

  Also see... தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. கூடை கூடையாக ஆற்றில் கொட்டி சென்ற விவசாயிகள்

  கிட்டத்தட்ட ரூபாய் 150 வரை கிலோவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செவ்வந்தி பூ உற்பத்தி செய்த விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dindigul