முகப்பு /செய்தி /திண்டுக்கல் / 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.. திண்டுக்கல்லில் பதற்றம்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.. திண்டுக்கல்லில் பதற்றம்

விபத்தில் நொறுங்கிய லாரி

விபத்தில் நொறுங்கிய லாரி

dindigul accident | ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul | Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வாழைகிரி  அருகே கண்டெய்னர் லாரி 150 அடி ஆழ பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் இன்று காலை பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வாழைகிரி அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ப‌ல‌த்த‌ ச‌த்த‌ம் கேட்க‌வே இந்த‌ பிர‌தான‌ ம‌லைச்சாலை வழியாக பயணித்த வாகன ஓட்டுன‌ர்க‌ள் ம‌ற்றும் அப்ப‌குதியில் இருந்த‌வ‌ர்க‌ள் இந்த விப‌த்து குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 150 அடி ப‌ள்ள‌த்தில் இற‌ங்கி விப‌த்துக்குள்ளான‌ கண்டெய்னர் லாரியில் காய‌த்துட‌ன் சிக்கி த‌வித்த‌ டிரைவர் மற்றும் கிளீனர் , உண‌வுப்பொருட்க‌ள் ச‌ப்ளை செய்யும் ப‌ணியாள‌ர்க‌ள் உட்ப‌ட‌ நான்கு  ந‌ப‌ர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Accident, Dindigul, Local News