முகப்பு /செய்தி /திண்டுக்கல் / திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து - 3 பேர் பலியான சோகம்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்!

திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து - 3 பேர் பலியான சோகம்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்!

கார் விபத்து

கார் விபத்து

கார் டயர் வெடித்ததில், ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Dindigul

திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே உள்ள செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில்  கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த கார் T.பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டி சென்று எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ | கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? போலீஸ் விசாரணை சொல்வது என்ன?

இந்த நிலையில், சிகிச்சைக்காக வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Accident, Bus accident, Car accident, Crime News, Death, Dindigul