Home /News /dindigul /

சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா? ஓபிஎஸ் சொன்ன பதில்!!

சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா? ஓபிஎஸ் சொன்ன பதில்!!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Dindigul | சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு அரசியல் களத்தில் பதில் சொல்லப்படும் என ஓ.பன்னீர்செல்வம் மழுப்பலாக பதில் அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India
    திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த  ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”மாயத்தேவர் எம்.ஜி.ஆர் புதிதாக துவக்கிய அஇஅதிமுக சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர் தான் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்” என்று கூறினார்.

    அதனை தொடர்ந்து பேசியவர், ”அவர் இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் இந்த உலகம் உள்ளவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒவ்வொரு தொண்டன் இருக்கும் வரை அவருடைய நினைவு எங்களுடைய உள்ளத்தில் என்றைக்கும் நிறைந்திருக்கும் என்று எங்களின் இதய  பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    Also see... உதகையில் 4 வயது பெண் குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழப்பு...

    அப்போது சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, ”அண்ணனுடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருக்கிறோம். உங்களுடைய கேள்விகளுக்கு உரிய பதில் அரசியல் களத்தில் சொல்லப்படும்” என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

    செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, EPS, OPS, Sasikala

    அடுத்த செய்தி