முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கஞ்சா போதையில் தகராறு.. ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

கஞ்சா போதையில் தகராறு.. ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

தந்தையை கொன்ற மகன் கைது

தந்தையை கொன்ற மகன் கைது

Crime News: கஞ்சா போதையில் தாயை  தகாத வார்த்தையால் திட்டிய  தந்தையை  தீர்த்து கட்டிய மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  அகரம் பேரூராட்சி டி.அயம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் - பாக்கியம் தம்பதி. இவர்களுக்கு நந்தினி என்ற மகளும் சரவணக்குமார் (வயது 20) சிவா (வயது 17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மகள் நந்தினி திருமணம் முடிந்து கணவர் வீட்டில் இருக்கிறார்.

காளியப்பன் அவரது மனைவி இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். காளியப்பனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றும்  வழக்கம் போல்  கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசியும்  தாக்கவும் முயன்றுள்ளார் .

இதனால்  ஆத்திரமடைந்த காளியப்பனின் மகன்  சரவணக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தனது தகப்பனாரை நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால்  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே காளியப்பன் பலியானார்.

Also Read: சென்னை வங்கிக் கொள்ளை - 9 இடங்களில் 31.7 கிலோ தங்கநகைகள் மீட்பு.. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

தகவல் அறிந்து அங்கு  வந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்தில் இறந்து கிடந்த காளியப்பனை  பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு  தந்தையை  கொலை செய்த மகன்  சரவணக்குமாரை  வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர் .

செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)

First published:

Tags: Crime News, Dindugal, Murder case