Home /News /dindigul /

கொடைக்கானலில் கனமழை.. மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் கனமழை.. மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Kodaikanal | கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் பெய்து வ‌ரும் இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ க‌ன‌ம‌ழையால் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் வாழைகிரி ம‌ற்றும் ம‌ச்சூர் ப‌குதிக‌ளில் ராட்சத‌ ம‌ர‌ம் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவ‌ர‌த்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    த‌மிழ‌க‌ ப‌குதிக‌ளின் மேல் நில‌வும் கீழ‌டுக்கு வ‌ளிம‌ண்ட‌ல‌ சுழ‌ற்சி கார‌ண‌மாக‌ 21 மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ன‌ ம‌ழை பெய்ய‌ வாய்ப்பிருப்ப‌தாக‌ சென்னை வானிலை ஆய்வு மைய‌ம் தெரிவித்திருந்த‌து, இந்நிலையில் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை முதலே மிதமான வெப்பம் நிலவிய நிலையில் மாலை சுமார் இர‌ண்டு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ க‌ன‌மழை பெய்தது. 

    குறிப்பாக ஏரிச்சாலை, அப்சர் வேட்டரி, நாயுடுபுரம், மூஞ்சிக்க‌ல், உகார்த்தே ந‌க‌ர், ஊத்து, ப‌ண்ணைக்காடு, ம‌ச்சூர், வாழைகிரி  உள்ளிட்ட ப‌ல்வேறு பகுதிகளிலும் இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ க‌ன‌ ம‌ழை பெய்ததால் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் வாழைகிரி, ம‌ற்றும் ம‌ச்சூர் ப‌குதிக‌ளில் ராட்ச‌த ம‌ர‌ங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிப்பு ஏற்ப‌ட்டது.

    Also see... விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி.. விவசாயிகள் போராட்டம்



    இதனால் சாலையின் இரு புற‌ங்க‌ளிலும் வாக‌ன‌ங்க‌ள் அணிவ‌குத்து காத்திருந்த‌ன. த‌க‌வ‌ல் அறிந்த‌ நெடுஞ்சாலைதுறையின‌ர் ஜேசிபி வாக‌ன‌ம் மூல‌ம் சாலையில் விழுந்த‌ ராட்ச‌த‌ ம‌ர‌ங்க‌ளை அப்புற‌ப்ப‌டுத்தி ஒரு  ம‌ணி நேர‌த்திற்கு பின் போக்குவ‌ர‌த்தை சீர் செய்த‌ன‌ர். மேலும்  தொட‌ரும் ம‌ழையால் சாலைக‌ளில் நீர் ஆறு போல‌ ஓடிய‌து. மேலும்  குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

    செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Heavy Rainfall, Kodaikanal, Road Safety, Traffic

    அடுத்த செய்தி