Home /News /dindigul /

பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி

பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி

Palani Archagar School : பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani, India
    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்க விழாவை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

    பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். பழனி கோயில் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சைவ மற்றும் வைணவ ஆகம பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்படும். மேலும் தமிழ் இலக்கியம், நீதி நூல்கள், திருக்குறள் உள்ளிட்ட பாட பாடநூல்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். தற்போது அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 16 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த இந்த மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் தங்கி ஒரு வருட காலத்திற்கு பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள்


    சிறுவயதில் இருந்தே கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று விருப்பப்பட்ட மாணவர்களுக்கு தற்போது துவங்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளியில் சேரலாம். அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகலாம், கோயில்களில் பூஜை செய்யலாம் என்ற சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் கோயில் இணைய ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: MK Stalin, Palani

    அடுத்த செய்தி