ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

லிவிங் டூ கெதர் ஜோடி.. மரணத்தில் முடிந்த சந்திப்பு - நள்ளிரவில் விடுதியில் நடந்தது என்ன?

லிவிங் டூ கெதர் ஜோடி.. மரணத்தில் முடிந்த சந்திப்பு - நள்ளிரவில் விடுதியில் நடந்தது என்ன?

கொடைக்கானல்

கொடைக்கானல்

Crime News : கொடைக்கானலில் கணவன் மனைவி போல் வாழ்ந்த ஜோடி பிரிந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ந்த சந்திப்பு மரணத்தில் முடிந்ததால் அதிர்ச்சி

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவர் கொடைக்கான பூம்பாரை மலைக்கிராமத்தில் உள்ள  தனியார் விடுதி ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது தனியார் தங்கும் விடுதி அருகில் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா(25) என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளர்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் - மனைவி போல் திருமணம் நடைபெறாத நிலையில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சூர்யா மது அருந்தும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. இவரது நடத்தை சரியில்லாத காரணத்தினால் ஸ்வேதா பழக்கவழக்கத்தை நிறுத்தி கொண்டு பிரிந்து சென்னை செல்கிறார்.

மேலும் சூர்யாவின் தொலைபேசி எண்ணை தனது செல்போனில் பிளாக் செய்ததுடன் வாட்ஸ் அப்பிலும் பிளாக் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூம்பாறை கிராமத்தில் இருந்த சூர்யா  கொடைக்கானல் முக்கிய குடியிருப்பு பகுதியான கல்லுக்குழி பகுதியில் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மீண்டும்  ஸ்வேதா   கொடைக்கானலுக்கு வருகை புரிந்து பம்பார்புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் பள்ளிகளில் யோகா ஆசிரியராக பணி புரிய வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் ஸ்வேதா தனது போனில் சூர்யா எண்ணை  அன் பிளாக் செய்துள்ளார். மீண்டும் இருவரும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல்கள் பகிர்ந்து செல்போனில் பேசி நேரில் சந்தித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு சூர்யா தங்கியிருக்கும் கல்லுக்குழி பகுதிக்கு ஸ்வேதாவை அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் இரவு உணவை உண்டு உள்ளனர், இதனையடுத்து நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கை கலப்பு ஆனதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஸ்வேதா தனது நண்பர்களை போனில் அழைத்து நான் கல்லுக்குழியில் உள்ள மலோனி குடிலில் இருக்கிறேன் தன்னை உடனடியாக அழைத்து செல்லுமாறு தகவல் தெரிவித்துள்ளார்,  அங்கு அவ‌ர‌து 4 ஆண் நண்பர்கள் வந்துள்ளனர். அங்கு ஸ்வேதா மற்றும் சூர்யாவிற்கு ஏற்பட்ட தகராறை  ஸ்வேதா ஆண் நண்பர்கள் விளக்கும்  போது எதிர்பாராதவிதமாக சூர்யா படியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த ஆண் நண்பர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து கொடைக்கானல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று  ஸ்வேதா மற்றும் ஆண் நண்பர்கள் நால்வரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கொடைக்கானல் காவல் நிலையம் வருகை புரிந்து  ஸ்வேதா மற்றும் ஆண் நண்பர்களிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் சூர்யா தந்தை அய்யாதுரை காவல் நிலையத்தில் தனது மகனுக்கு தலை,கை மற்றும் கண்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,வலது கையில் வெந்த காயம் ஏற்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளார்.

Also Read:  நள்ளிரவில் அம்மாவை பார்த்து அதிர்ந்துபோன மகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை - நடந்தது என்ன?

மேலும் சூர்யாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் கொலையா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் த‌ட‌ய‌விய‌ல் நிபுண‌ர்க‌ளும் வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், இச்சம்பவம் கல்லுக்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 செய்தியாளர் : ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)

First published:

Tags: Crime News, Local News, Tamil News, Young love couple