ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! - கொடைக்கானல் மக்களுக்கு அலெர்ட்!

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! - கொடைக்கானல் மக்களுக்கு அலெர்ட்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் க‌ல்ல‌றைமேடு, செண்ப‌க‌னூர், புலிச்சோலை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இலேசான‌ ம‌ண்சரிவு ஏற்ப‌ட்டுள்ள‌து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் பெய்து வ‌ரும் க‌ன‌ம‌ழையால் வெள்ளிநீர்வீழ்ச்சிப்ப‌குதியில் வெள்ள‌ப்பெருக்கு, பேத்துப்பாறை வ‌ய‌ல்ப‌குதி ம‌ற்றும் ஆற்றோர‌க் க‌ரைப்ப‌குதிக‌ளில் வ‌சிக்கும் பொதும‌க்கள் பத்திரமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில்  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 15 நாட்களாக கடும் குளிருடன் உறைபனி பொதுமக்களை வாட்டி எடுத்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் கடும் உறைபனி நிலவியதால் பொதுமக்களின் அன்றாடப்பணிகள் பாதிப்படைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வேளையில் பெய்ய தொடங்கிய மழை இரவு 12 மணி வரை நீடித்தது.

இத‌னால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அருவிக‌ளில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து, குறிப்பாக கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் க‌ல்ல‌றைமேடு, செண்ப‌க‌னூர், புலிச்சோலை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இலேசான‌ ம‌ண்சரிவு ஏற்ப‌ட்டுள்ள‌து. ம‌ண்ச‌ரிவினை சீர‌மைக்கும் பணிக‌ளில் நெடுஞ்சாலைதுறையின‌ர் தீவிர‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் ம‌ழை தொட‌ர்வ‌தாலும் வெள்ளிநீர்வீழ்ச்சியில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌தாலும், பேத்துப்பாறை ஆற்றுக்க‌ரையோர‌ப்ப‌குதிக‌ளில் வ‌சிக்கும் பொதும‌க்க‌ள் பாதுகாப்பாக‌ ப‌த்திர‌மாக‌ இருக்க‌வும், ம‌லைச்சாலைக‌ளில் வாக‌ன‌ங்க‌ளில் ப‌ய‌ணிக்கும் பொதும‌க்க‌ளும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் மித‌மான‌ வேக‌த்திலும் க‌வ‌ன‌த்துட‌னும் ப‌ய‌ணிக்க‌ கோட்டாட்சிய‌ர் இராஜா வேண்டுகோள் விடுத்துள்ள‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக்

First published:

Tags: Dindigul, Heavy rain, Kodaikanal