ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

பள்ளி மாணவர்களுக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

பள்ளி மாணவர்களுக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Dindugul Bjp Protest | பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்களில்  பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

பொங்கல் பரிசு தொகுப்புடன் தமிழக அரசு தேங்காய்கள் வழங்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

தேங்காய் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில்  ரேஷன் கடைகளில் தேங்காய்கள் வழங்க வேண்டும்  என்றும் பள்ளி -மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில்  பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த கோரி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பொங்கல் பரிசாக பரிசு பொருட்களுடன் விவசாயிகளின் வேளாண் பொருட்களை வழங்க வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் ஆகியோர் தமிழக அரசு வலியுறுத்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் அடிப்படையிலேயே தற்போது பொங்கல் பரிசு கரும்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல் தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய்களை விவசாயிகளிடம்  அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்றும் அதேபோல்  பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்களில்  பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சத்துணவு திட்டங்களிலும் தேங்க என்னை பயன்படுத்த வேண்டும் எனக்கோரி  பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர்

First published:

Tags: BJP, Dindugal, Local News, Protest