முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வானதி சீனிவாசன் சாமி தரிசனம்

பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வானதி சீனிவாசன் சாமி தரிசனம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Vanathi srinivasan : பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani, India

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த ஜனவரி 30ஆம் தேதி கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இந்த பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து வந்த வானதி சீனிவாசன் இன்று பழனி வந்தடைந்தார். பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டு, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு சென்ற வானதி சீனிவாசன் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பாதயாத்திரை ஆக பழனி வந்த சீனிவாசனுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரியை நிறைவு செய்த வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.

செய்தியாளர் : அங்குபாபு நடராஜன் (பழனி)

First published:

Tags: BJP, Dindugal, Local News, Palani, Tamil News, Vanathi srinivasan