ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாம்.. கொடைக்கானல் செல்வோருக்கு எச்சரிக்கை

பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாம்.. கொடைக்கானல் செல்வோருக்கு எச்சரிக்கை

 யானை கூட்டம்

யானை கூட்டம்

Dindigul | காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் பேரிஜ‌ம் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதிகளில் முகாமிட்டுள்ள‌தால் இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிகள் செல்ல‌ த‌ற்காலிக‌ த‌டை என்று வ‌ன‌த்துறை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வதேச‌ சுற்றுலாத‌ல‌மாகும், இங்கு தூண் பாறை, குணா குகை, ப‌சுமை ப‌ள்ள‌தாக்கு, பைன் ம‌ர‌ச்சோலை, மோய‌ர்ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என‌ ப‌ல்வேறு சுற்றுலாத‌ல‌ங்க‌ள் உள்ளன. இருந்தாலும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை பெரிதும் க‌வ‌ரும் வித‌மாக‌ அமைந்திருப்ப‌து பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌ வ‌ன‌த்துறையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ பேரிஜ‌ம் ஏரி, தொப்பி தூக்கிப்பாறை, அமைதிப்ப‌ள்ள‌தாக்கு, உள்ளிட்ட‌ சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளாகும்.

  இத‌னை தொட‌ர்ந்து இந்த‌ பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்ல‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ன‌த்துறையின‌ரின் அனும‌தி பெற்று அத‌ற்குரிய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட‌ அளவிலான சுற்றுலாப்ப‌யணிக‌ள் சென்று அங்குள்ள‌ இய‌ற்கை எழில் கொஞ்சும் மன‌திற்கும், க‌ண்க‌ளுக்கும் புத்துண‌ர்ச்சி அளிக்கும் சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு ர‌சித்து வ‌ருவ‌து வாடிக்கையான‌ ஒன்று.

  இந்நிலையில் நேற்று மாலை முதல் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் இன்று முதல் ம‌று அறிவிப்பு வ‌ரும் வ‌ரை  பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர்.

  Also see... மாணவியை மருமகளே என அழைத்த ஆசிரியை பணியிட மாற்றம்..

  மேலும் பேரிஜ‌ம் ஏரிப்ப‌குதியில் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌ யானை கூட்ட‌ம் வேறு ப‌குதிக்கு செல்கின்ற‌தா என‌வும் வ‌ன‌த்துறையின‌ர் தீவிர‌மாக‌  க‌ண்காணித்து வ‌ருகின்ற‌ன‌ர். காட்டு யானைக‌ள் முகாமினால் வ‌ன‌த்துறையின‌ர் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌  த‌டை விதித்துள்ள‌தால் தொட‌ர் விடுமுறையில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பேரிஜ‌ம் ஏரிக்கு  செல்ல‌முடியாம‌ல் ஏமாற்ற‌ம‌டைந்த‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

  செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dindugal, Kodaikanal, Tourist spots