திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீரோடைகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு மலைக்கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
அஜய் பாண்டியன் கீழ்மலை கிராமமான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது புல்லாவெளி அருவியில் உள்ள பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவரது நண்பர்கள் கேமராவில் பதிவு செய்த இறுதி நிமிட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் மாயமான இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இரவு நேரம் ஆனதாலும் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்று மீண்டும் மாயமான இளைஞரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigal, Falls, Kodaikanal