Home /News /dindigul /

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்திக்குத்து.. படுகொலையில் முடிந்த சோகம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்திக்குத்து.. படுகொலையில் முடிந்த சோகம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு

கொலை

கொலை

Dindigul : திண்டுக் அருகே உள்ள வேடப்பட்டியில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

    திண்டுக்கலில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இதனால், பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையாக மாறி சோகத்தில் முடிந்தது.

    திண்டுக்கல்லை அடுத்துள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு நேற்று (28.07.22) பிறந்தநாள். இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் அருள் குணசேவியர், குட்டித் தம்பி உட்பட  ஆறு பேருடன் சேர்ந்து வேடப்பட்டி மயானம் அருகே கேக் வெட்டி மதுபானம் அருந்தி கொண்டாடி உள்ளனர்.

    அப்போது குட்டி தம்பிக்கும் அருள் குணசேவியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குட்டி தம்பி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த  கத்தியை எடுத்து வந்து அருள் குணசேவியரை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அருள்குண சேவியரை அவர்களது நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.ஆனால் வரும் வழியிலேயே அருள்குணசேவியர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் குட்டி தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Must Read : ஆண்மையற்றவர் என்பதை மறைத்து வரதட்சணையுடன் திருமணம் செய்த நபர் - 420 பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

    இறந்து போன அருள் குணசேவியருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நண்பனின் பிறந்தநாள்  கொண்டாட்டம்  படுகொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இறந்தவரின் உடலை கட்டிக்கொண்டு உறவினர்கள், மருத்துவமனையில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.

    செய்தியாளர் ; சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Dindigal, Murder

    அடுத்த செய்தி