திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, இதன் காரணமாக புல்வெளிகள், புதர்கள் செடி கொடிகள், பல்வேறு இடங்களில் காய்ந்தும் வருகின்றன. இதனை தொடர்ந்து தனியார் தோட்ட உரிமையாளர்கள் காய்ந்த செடி கொடிகளை அகற்றி தோட்டங்களை சுத்தம் செய்ய தீ வைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே உள்ள தனியார் பட்டா நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த தீயானது வனப்பகுதியின் அருகே எரிந்து வருவதனால் தீ வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க சுமார் 10க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்,
தற்போது தனியார் தோட்டப்பகுதிகளில் எரிந்து வரும் தீ எப்படி ஏற்பட்டது எனவும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தனியார் தோட்டங்களில் தீ வைப்பதற்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் ஆனால் சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் அனுமதி பெறாமல் தீ வைத்து வருகின்றனர்,.
அனுமதி பெறாமல் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வடகவுஞ்சி அருகே தனியார் தோட்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்து வருகிறது.
செய்தியாளர்: ஜாபர்சாதிக், கொடைக்கானல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire, Kodaikanal