Home /News /dindigul /

ட்ரிப்ள்ஸ் சென்ற மாணவர்கள் பைக் மோதியதில் தீப்பிடித்த பேருந்து... மாணவன் எரிந்து பலி... ஒட்டன்சத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்

ட்ரிப்ள்ஸ் சென்ற மாணவர்கள் பைக் மோதியதில் தீப்பிடித்த பேருந்து... மாணவன் எரிந்து பலி... ஒட்டன்சத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்

சாலை விபத்து

சாலை விபத்து

Dindigul |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

    கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தின் வழியாக சென்றது. அப்போது அவ்வழியே எதிர்நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பேருந்தின் முன்புறம் மோதினர். அப்படி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங் வெடித்தது.

    அதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபரில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே எரிந்து உயிரிழந்தார். மற்ற இருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பஸ்ஸில் பயணித்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

    சாலை விபத்து


    Also see... ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

    இந்த சம்பவம்குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Dindigal, Oddanchatram Constituency, Road accident

    அடுத்த செய்தி