முகப்பு /செய்தி /தர்மபுரி / உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.. பணம், குடியிருந்த வீட்டை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை

உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.. பணம், குடியிருந்த வீட்டை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர்  தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

Online Rummy : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாடில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு.  இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான முத்தானூரில் வசித்து வந்தார். தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வந்தார் பிரபு, பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம்காட்டி, அதற்கு அடிமையாகியுள்ளார். தொடர்ந்து விளையாடி ஆன்லைன் ரம்மியில் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இதனால், கடன் சுமை அதிகமான நிலையில், தான் குடியிருந்த வீட்டை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். அங்கும் பணி நேரத்திலும் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.

அப்போது, தன்னிடம் இருந்த ரூ.5000 பணத்தை  ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். அதோடு நிற்காமல், நண்பரிடம் ஏடிஎம் கார்டை பெற்று மேலும் ரூ.40,000 பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாலை வீட்டிற்கு சென்ற பிரபு மன உளைச்சலுக்கு ஆளாகிய  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது,

மேலும் குடியிருக்கும் வீட்டை விற்பதற்கு முன்தொகை பெற்று,  அதையும் ஆன்லைன் கேம் விளையாடி இழந்து ஏமாற்றம் அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அதோடு மட்டுமில்லாமல், பிரபுவுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்கொலை செய்துகொண்ட பிரபு

இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையில் யாரும் புகார் அளிக்காததால், வழக்கு பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆன்லைன் கேம் விளையாடி பணம் இழந்த விரக்தியில், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Must Read : பாம்பு கடித்து உயிரிழந்த 13 வயது சிறுமி… மூன்று மாதங்களுக்கு முன்பு வன்கொடுமை… இறப்பில் தொடரும் மர்மம்..!

ஆன்லைன் கேம் விளையாடி பண இழப்பை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சிலர் இந்த விளையாட்டுகளக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் - ஆர்.சுகுமாா்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Addicted to Online Game, Crime News, Dharmapuri, Online rummy, Sucide