Home /News /dharmapuri /

சிறுமிகள் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை.. காட்டிக்கொடுத்த செல்போன் வீடியோ - இளைஞர் கைது

சிறுமிகள் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை.. காட்டிக்கொடுத்த செல்போன் வீடியோ - இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட மனோஜ்

கைது செய்யப்பட்ட மனோஜ்

தருமபுரியில் பெண் குழந்தைகள் மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள விழுதுபட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் மனோஜ்( 22 ). இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு  ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருக்கும் போது, மனோஜ் செல்போனை அவருடைய நண்பர் ஒருவர் வாங்கி விளையாடியுள்ளார். பின்னர், செல்போனில் சேமித்து வைத்திருந்த வீடியோ காட்சிகள் புகைப்படங்களை பார்த்துள்ளார். அதில் பெண் பிள்ளைகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமிகளின் உறவினர்களிடம் தகவல் அளித்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனோஜின் செல்போனை பிடிங்கி பார்க்கும்போது, அதிலிருந்த வீடியோவை கண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் இருந்த 5 சிறுமிகளில் ஒரு சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிவித்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால் அரூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டதில், பெண் குழந்தையை வன்புணர்வு செய்தது மருத்துவ பரிசோதனையில் உண்மை என தெரியவந்தது.
    அதனைத் தொடர்ந்து, மனோஜ் மீது போக்சோ சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரை தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    Must Read : ஆசைக்கு இணங்காததால் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு மிரட்டல்.. இசையமைப்பாளர் மீது பெண் பகீர் புகார்

    இந்நிலையில், கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப பெண்கள் தற்போது வரை இதுகுறித்து புகார்கள் அளிக்காத நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மனோஜை காவலில் எடுத்து, போலீசார் மீண்டும்  விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Dharmapuri, Sexual harrasment, Youth arrested

    அடுத்த செய்தி