Home /News /dharmapuri /

தருமபுரி அருகே இரவில் காட்டு யானைகள் அட்டகாசம்.. அச்சத்தில் கிராம மக்கள்..

தருமபுரி அருகே இரவில் காட்டு யானைகள் அட்டகாசம்.. அச்சத்தில் கிராம மக்கள்..

விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள்

விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள்

Dharmapuri : தருமபுரி மாவட்டம் முதலிப்பட்டி கிராமத்தில் உணவு தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் 3 காட்டு யானைகள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்த   மூன்று காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். யானைகளை  வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். முதலிப்பட்டி கிராமத்தில்  அதிகாலை 3 மணியளவில் உணவு, தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என  3 காட்டு யானைகள், நஞ்சப்பன் என்பவரின் கரும்புதோட்டத்திற்குள் புகுந்தன.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற நஞ்சப்பன் கரும்பு தோட்டத்தில் யானைகள் இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் அப்பகுயில் முகாமிட்டு கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    கடந்த ஒரு மாதகாலமாக இந்த யானைகள் கிராமத்துக்குள் வந்து விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. கிராம விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக தோட்டப் பயிர்ச்செய்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அரிகரித்துக் காணப் படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விவசாய நிலத்தில் புகுந்த யானைகள்


    இவ்வாறான காட்டுயானை தொல்லை காரணமாக அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமது கிராமத்தில் மாலை 5மணிக்கு பின்னர் காட்டுயானைகள், ஊர் மனைக்குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இரவு முழுவதும் விழித்திருந்து அவற்றை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    Must Read : மாடி கட்டட பள்ளிகளிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி... 7 நாளில் 3 மாணவர்கள் விபரீதம்..

    இதனால், தங்கள் பகுதியை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிமலை காப்புக்காடு பகுதிகளுக்கு மூன்று காட்டு யானைகளும் வனத்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டன.

    செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Dharmapuri, Elephant

    அடுத்த செய்தி