Home /News /dharmapuri /

ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை சுட்டுக்கொலை.. வேட்டை கும்பல் அட்டுழியம்..

ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை சுட்டுக்கொலை.. வேட்டை கும்பல் அட்டுழியம்..

காட்டு யானை சுட்டுக்கொலை.. வேட்டை கும்பல் அட்டுழியம்..

காட்டு யானை சுட்டுக்கொலை.. வேட்டை கும்பல் அட்டுழியம்..

வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை சுட்டுக்கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

    தருமபரி மாவட்ட வனப்பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த ஒற்றை யானையை வேட்டை கும்பல் ஒன்று சுட்டுக்கொன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. யானை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பல் சிக்குமா?

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வன பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

    வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தாலும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டையாடும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட கணவாய் வனபகுதியில் காட்டுயானை ஒன்று இறந்துகிடப்பதாக வன துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது

    உடனே சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சென்று பார்த்த போது மக்னா வகை யானை இறந்து கிடந்துள்ளது.

    யானை இறந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிந்த நிலையில் யானையின் மரணம் தொடர்பாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலையே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதற்கட்ட விசாரணையில் யானை வேட்டை கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்படுள்ளது தெரியவந்துள்ளது.

    மக்னா வகை யானைகள் கூட்டத்துடன் சேராமல் தனியா சுற்றித்திரியும் பண்புக்கொண்டவை ,தந்தம் முழுமையாக வளராமல் இருக்கும் .

    இந்நிலையில் யானையை சுட்டுக்கொன்றது யார்? எதற்காக யானையை கொன்றார்கள்? எப்படி வேட்டை கும்பல் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த்து என்று போலீசார் தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Elephant

    அடுத்த செய்தி