முகப்பு /செய்தி /தர்மபுரி / தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்து காணப்படும் ஒகேனக்கல் அருவி..

தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்து காணப்படும் ஒகேனக்கல் அருவி..

தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்து காணப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்து காணப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

Dharmapuri News : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு மாத காலத்திற்கு பின் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் 5 அருவிகளில் 2 அருவியில் மட்டுமே தண்ணீர் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சென்ற ஆண்டு அதிகமான தண்ணீர் வரத்து காணப்பட்டது. குறிப்பாக பல மாதங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சென்ற ஆண்டின் இறுதியில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் சென்ற மாதம் வினாடிக்கு 2000 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. மிதமான தண்ணீர் வரத்து காரணமாக ஒகேனக்கலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து நேற்று (15.02.23)ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கோடை தொடங்கும் நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க கூடும் நிலையில் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழவும், அருவிகளை பரிசல் மூலம் சென்று பார்க்கவும் வருவார்கள். அந்த அருவியின் சாரலில் நனைந்து செல்லும் ஒரு அழகான காட்சி இருக்கும் தற்போது 5 அருவியில் தண்ணீர் இல்லாமல் 2 அருவிகளில் மட்டுமே தண்ணீர் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வரத்து குறைவால் படர்ந்து விரிந்த காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது.

செய்தியாளர் : சுகுமார் - தர்மபுரி

First published:

Tags: Dharmapuri, Local News