ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

காவிரியில் குறைந்தது நீர் வரத்து.. ஓகேனக்கலில் 14 நாட்களுக்கு பின்னர் பரிசல் பயணம், குளிக்க அனுமதி...

காவிரியில் குறைந்தது நீர் வரத்து.. ஓகேனக்கலில் 14 நாட்களுக்கு பின்னர் பரிசல் பயணம், குளிக்க அனுமதி...

காவிரி ஆறு

காவிரி ஆறு

Dharmapuri | ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர் வரத்து குறைந்ததால் 14 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும்  கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து  ஒரு லட்சத்து 85 ஆயிரம் வரை அதிகரித்தது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் 14 நாட்கள் தொடர் தடையை நீடித்தது. இந்த நிலையில் படிப்படியாக நீர் வரத்து குறைந்து இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ளவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

    Also see...இந்தி திணிப்பு: கழுத்தை அறுக்க தயாராகவுள்ள கத்தி - வைரமுத்து ஆவேசம்!

    சுற்றுலா பணிகள் அருவில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பரிசலில் உற்சாகத்துடன் சென்று அருவியலில் குளித்து மகிழ்கின்றனர்.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cauvery River, Dharmapuri