தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெண்டையனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மருக்கம்பட்டி பங்காரு குழிக்காடு கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரியில் தண்ணீர் தேங்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் வசதி கிடைக்கும்.
இந்த பகுதியில் 1993 ஆம் ஆண்டில் ஏரியில் தடுப்பணை கட்டி உபரிநீரை கிராம மக்கள் விவசாயத்திற்கும் ஆடு, மாடு பருகுவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் மகன்கள் நல்லதம்பி, இளங்கோவன், குப்புசாமி, ஆகிய மூவரும் ஏரி, தங்களது விவசாய நிலத்தில் இருப்பதாக கூறி ஏரியில் தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து ஏரியின் தடுப்பணையை சேதப்படுத்திய நல்லதம்பி, இளங்கோவன், குப்புசாமி ஆகியோரிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது பட்டா விவசாய நிலத்தில் அந்த தடுப்பணை இருப்பதால், இந்த இடத்திற்கு யாரும் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் இந்த மக்களின் கோரிக்கைக்கு, யாரும் செவி சாய்க்கவில்லை. இதனை அடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து 50க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏரியை மீட்டு தர வேண்டும் ஏரி தடுப்பணியை சேதப்படுத்திய மூவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில், இந்த ஏரியை காலம் காலமாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது சகோதரர்கள் மூன்று பேரும் ஒன்றிணைந்து ஏரியின் தடுப்பணையை உடைத்து விட்டார்கள். இந்த ஏரியில் தண்ணீர் இல்லையென்றால், இங்குள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடும்.
Must Read : திருவள்ளூர் மாணவியின் பிரேத பரிசோதனை நிறைவு.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு
இந்த ஏரியை ஆக்கிரமித்து கொள்ளலாம் என உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாமல் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரி தடுப்பணையை உடைத்து சேதப்படுத்திய இளங்கோவன், நல்லதம்பி மற்றும் குப்புசாமி ஆகிய மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, ஏரியை மீட்டுத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Water