ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி.. 2 மாதங்களுக்கு பிறகு குவியும் சுற்றுலா பயணிகள்..!

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி.. 2 மாதங்களுக்கு பிறகு குவியும் சுற்றுலா பயணிகள்..!

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

தற்போது வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீர்படுத்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dharmapuri | Tamil Nadu

  ஒகேனக்கல் அருவியில் 2 மாதங்களுக்கு பிறகு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்வர்.

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவிகள் சேதமடைந்ததாலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து வந்தனர். இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

  Also read | மீண்டும் பெய்த கனமழையால் ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்ந்தது...

  தற்போது வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீர்படுத்தி உள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

  தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

  செய்தியாளர்: சுகுமார்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Dharmapuri, Falls, Tourist spots