கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு இந்த இரண்டு அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு மொத்தம் 1,10,964 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுலுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று காலை காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வினாடிக்கு சுமார் 16,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று காலை மீண்டும் அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து, கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
Also see... ம.பி.யில் பயங்கரம்: 7 வயது சிறுவனை உயிருடன் விழுங்கிய ராட்சத முதலை
மேலும் நீர்வரத்து படிப்படியாக உயரும் என்பதால், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தார். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செல்ல கூடாது எனவும், ஆற்றல் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றுப் பக்கம் அனுப்பவவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நீர்வரத்து அதிகரப்பால், ஒகேனக்கலில் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River